சேதுராமன் சாத்தப்பனுக்கு 'வணிக ஊக்கி நிபுணர்' விருது
சேதுராமன் சாத்தப்பனுக்கு 'வணிக ஊக்கி நிபுணர்' விருது
ADDED : ஜன 30, 2024 07:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மும்பையில் நடந்த மகாராஷ்டிரா தமிழ் எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாவில், தினமலர் நாளிதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் பொருளாதார நிபுணர் சேதுராமன் சாத்தப்பனுக்கு 'வணிக ஊக்கி நிபுணர்' விருது வழங்கப்பட்டது. தொழில் முனைவோருக்கான வழி காட்டுதல், ஊக்குவிப்பு, பேச்சாற்றலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் அலி ஷேக் மீரான், தமிழ் எழுத்தாளர் மன்ற தலைவர் வதிலை பிரதாபன், தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், எழுத்தாளர் மு.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டனர்.