ADDED : மே 15, 2026 06:31 AM
சென்னை : 'நீட்' வினாத்தாள் கசிவை கண்டித்து, எஸ்.எப்.ஐ., மாணவர் அமைப்பு சார்பில், நேற்று தமிழகம் முழுதும், மத்திய அரசு அலுவலகங்கள் முன், முற்றுகை போராட்டம் நடந்தது.
சென்னை சாஸ்திரி பவன் அருகே நடந்த போராட்டத்திற்கு, அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலர் சம்சீர் அகமத் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது, சம்சீர் அகமத் அளித்த பேட்டி: கடந்த 2024ல் 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. தற்போது மீண்டும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடந்துள்ளது.
'நீட்' தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மீது மாணவர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்த அமைப்பை கலைக்க வேண்டும்.
இப்பிரச்னையில், தமிழக முதல்வர் விஜய், தன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக அரசு, இதை சட்ட போராட்டமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
