ADDED : பிப் 06, 2025 09:49 PM
திருப்பரங்குன்றம் மலையைக் காக்க நடைபெற்ற மாபெரும் ஆர்பாட்டத்தில் மக்கள், பக்தர்கள் பெருந்திரளாக கட்சி பாரபட்சம் இன்றி கலந்து கொண்டனர். ஆனால், போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை அமைச்சர் சேகர்பாபு கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார். சிறுபான்மையினரின் ஓட்டுக்காக அரசியல் ஆதாயம் கருதி முருக பக்தர்களுக்கு எதிராகப் பேசியுள்ளார்.
நவாஸ் கனி, மற்றும் அப்துல் சமது ஆகியோர் ஹிந்துக்களின் புனித தலத்துக்கு வந்து, அசைவ உணவை சாப்பிட்டு மதமோதல் ஏற்படுத்தும் வேலையை செய்தனர்.
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் என்ற வகையிலாவது நவாஸ் கனியின் செயலை சேகர்பாபு கண்டித்தாரா?
ஹிந்து அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று லட்சக்கணக்கில் மக்கள் போராட்டக் களத்துக்கு வந்தது கண்டு, தி.மு.க.,வுக்கு வயிறு எரிகிறது.
ஹிந்து கோவில்கள் நலனில் சிறிதும் அக்கறை காட்டாத சேகர்பாபு, ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
காடேஸ்வரா சுப்பிரமணியம்,
மாநிலத் தலைவர், ஹிந்து முன்னணி

