ஆர்டர் கொடுத்துவிட்டு உற்பத்தியை நிறுத்த சொல்லும் அமெரிக்க வர்த்தகர்களால் அதிர்ச்சி
ஆர்டர் கொடுத்துவிட்டு உற்பத்தியை நிறுத்த சொல்லும் அமெரிக்க வர்த்தகர்களால் அதிர்ச்சி
ADDED : ஆக 26, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அமெரிக்க வர்த்தகர்கள், ஆர்டர் மீதான உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு வலியுறுத்துவதால், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:
பெரும்பாலான வர்த்தகர்கள், 'கொடுத்த ஆர்டர் மீதான பணியை, அப்படியே நிறுத்தி வையுங்கள்' என்று சொல்ல துவங்கி விட்டனர்.
ஆர்டர் பெற்றதும், நுால் கொள்முதல் செய்து, 'நிட்டிங்' செய்து, அதை வெட்டி, ஆடை உற்பத்தி பணியை துவக்கி விட்டோம். திடீரென நிறுத்தினால், தொழிலாளருக்கு வேலை கொடுப்பது பாதிக்கும்; தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும் என்பதால், உற்பத்தியை தொடர்ந்து வருகிறோம். கடன் வாங்கி, முதலீடு செய்த தொகையை, காப்பீட்டு திட்டம் வாயிலாக சரிகட்ட மத்திய அரசு உதவ வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

