சிறுவர்களா இவர்கள்; சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி!
சிறுவர்களா இவர்கள்; சாலையில் நடந்து சென்றவரை கொடூரமாக தாக்கிய வீடியோவால் அதிர்ச்சி!
ADDED : பிப் 20, 2025 08:45 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையில் நடந்த சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போன் பறித்துச் சென்ற மூன்று சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க காஞ்சிபுரத்தை சேர்ந்த டேவிட் ராஜன் என்பவர் வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு 2 மணி அளவில் பூந்தோட்டத்தில் இருந்து பஸ் நிலையம் செல்வதற்காக பெங்களூர் சாலை வழியாக நடந்து சென்ற பொழுது அங்கு வந்த 13 வயது, 15 வயது, 16 வயதுடைய 3 சிறுவர்கள் திடீரென டேவிட் ராஜனை தாக்கியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த டேவிட் ராஜன் முகத்தின் மீது கற்களை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு செல்போனைப் பறித்து கொண்டு தப்பி ஓடினர். அங்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த டேவிட் ராஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், டேவிட் ராஜன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். பின்னர், மூன்று சிறுவர்களையும் போலீசார் பிடித்து கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

