தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இனிப்புகளில் கலப்படம் தடுக்க கடைகளில் சோதனை நடத்த உத்தரவு

இனிப்புகளில் கலப்படம் தடுக்க கடைகளில் சோதனை நடத்த உத்தரவு

இனிப்புகளில் கலப்படம் தடுக்க கடைகளில் சோதனை நடத்த உத்தரவு


ADDED : அக் 04, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

–நமது நிருபர்–: நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்புகள் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க, மாநிலம் முழுதும் தீவிர கண்காணிப்பு, திடீர் சோதனைகள் மேற்கொள்ள, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் லால்வேனா உத்தரவிட்டுள்ளார்.

பண்டிகை காலம் துவங்கி விட்டதால், இனிப்புகள், கார வகைகள், குளிர்பானங்கள், சமையல் எண்ணெய், நெய், கோவா மற்றும் பனீர் போன்ற பொருட்களின் விற்பனை அதிகரிப்பது வழக்கம். இதை சாதகமாக பயன்படுத்தி, போலி மற்றும் கலப்பட பொருட்களை, சந்தையில் குறைந்த விலையில் விற்பதாக புகார் எழுந்துள்ளது.

இதை தடுப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., அறிவுறுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையரகம் சார்பில், அனைத்து மாவட்ட நியமன அலுவலர்களுக்கும், பண்டிகைக்கால சிறப்பு ஆய்வு நடத்த, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக, இனிப்பு, கார தின்பண்டங்கள் விற்கும் கடைகள், பால் பொருட்கள் விற்பனை செய்யும் மையங்கள், எண்ணெய் ஆலைகள் மற்றும் சந்தை பகுதிகளில், தொடர்ந்து ஆய்வு செய்து, மாதிரிகளை சேகரிக்க வேண்டும். நடமாடும் உணவு பரிசோதனை வாகனங்களை, முக்கிய சந்தைகள் மற்றும் சந்தேகத்திற்குரிய இடங்களுக்கு அனுப்பி, உணவு பொருட்களை உடனடியாக பரிசோதிக்க வேண்டும்.

சோதனைகள் மற்றும் எடுக்கப்பட்ட மாதிரிகள் குறித்த விபரங்களை, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இந்த சிறப்பு சோதனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு அறிக்கையை, வரும் நவம்பர், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கமிஷனர் லால்வேனா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us