ADDED : டிச 10, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து, 14 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த தோப்புசேரியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கணேஷ்குமார், 37; இவர் ரிஷிவந்தியம் அடுத்த கீழத்தேனுாரில் துணிக்கடை வைத்துள்ளார்.
நேற்று காலை 7:00 மணிக்கு கடை திறக்க சென்றபோது,ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே கல்லாவின் இருந்த 12 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. அதே காம்ப்ளக்சில் உள்ள ஜெயமூர்த்தி என்பவரது மெடிக்கல் கடையில் 2,000 ரூபாய் திருடு போனது. புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

