ADDED : பிப் 19, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று காலை, 10:30 மணிக்கு போக்குவரத்து எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் பஞ்சு மார்க்கெட் அருகே பணியில் இருந்த போது, மதுக்கடையில் இருந்து ஒரு டூ - வீலரில் இருவர் வந்தனர்.
எஸ்.ஐ., தாமரைக்கண்ணன் அவர்களை நிறுத்த முயன்று, டூ - வீலரில் விரட்டிச் சென்றார். அவர்களை மறித்து, குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தெரிய வரவே, அவர்களது டூ - வீலரின் சாவியை எடுத்தார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகள், அவரது கையில் இருந்த தங்கள் டூ - வீலரின் சாவியை பிடுங்கிக் கொண்டு, தாமரைக்கண்ணனின் டூ - வீலர் சாவியையும் எடுத்துக் கொண்டு தப்பினர்.
இதில், அவரது விரலில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

