இரு விமானங்கள் பக்கவாட்டில் மோதல்: இறக்கைகள் சேதம்
இரு விமானங்கள் பக்கவாட்டில் மோதல்: இறக்கைகள் சேதம்
UPDATED : ஏப் 07, 2024 12:30 AM
ADDED : ஏப் 07, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: பிரிட்டனில் விமான நிலையத்தில் இரு விமானங்கள் பக்கவாட்டில் உரசிக்கொண்ட சம்பவம் நடந்தது.
பிரிட்டனின் தலைநகர் லண்டனில் ஹீத்ரு விமான நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.நேற்று மூன்றாவது டெர்மினல் பகுதியில் வெர்ஜின் அட்லாண்டிக் போயிங் 787-9 ரக விமானம் பயணிகளை இறக்கிவிட்டநிலையில் அதே ஓடுபாதையில் வந்திறங்கியது மற்றொரு விமானம் .அப்போது பக்கவாட்டில் இறக்கை பகுதியில் லேசாக உரசியதில் இரு விமானங்களின் இறக்கைகளும் சேதமடைந்தன.
அதிஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

