நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், கிராம நிர்வாக அலுவலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட, டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, முதற்கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, கடந்த ஜன., 22 முதல் பிப்., 17 வரை நடந்தது.
இரண்டாம் கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல் 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.