நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், மேலாண்மை கல்வி பயில, 'சிமேட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். நடப்பாண்டுக்கான சிமேட் தேர்வு ஜனவரியில் நடக்கிறது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்று முடிகிறது. https://cmat.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழக திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், 'மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ., டேட்டா அனலிஸ்ட்' சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, தர்மபுரி, மதுரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நடத்தப்படும், 18 நாள் பயிற்சிக்கு, பட்டப்படிப்பு முடித்தோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4296 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

