தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சிலவரி செய்திகள்

 சிலவரி செய்திகள்

 சிலவரி செய்திகள்


ADDED : ஜன 30, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 06:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலை தொலைதுார கல்வி நிறுவனத்தின், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., 'கம்யூட்டர் சயின்ஸ்' படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, வரும் மார்ச் 15ம் தேதி நடக்கிறது. இதற்காக, இளநிலை மாணவர்கள் மார்ச் 6ம் தேதி வரை, cde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கிளைகளில் காலியாக உள்ள, 2,050 சி.பி.ஓ., பணியிடங்களுக்கு, தகுதியான பட்டதாரிகள், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு, பிப்., 18ம் தேதிக்குள், 'https://sbi.bank.in/web/careers/current openings' என்ற இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் பரவலாக வறண்ட வானிலை காணப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிபேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். பிப்., 1 முதல் தென் மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us