ம.தி.மு.க.,வில் மவுனப்புரட்சி: தயார் நிலையில் மூத்த நிர்வாகிகள்
ம.தி.மு.க.,வில் மவுனப்புரட்சி: தயார் நிலையில் மூத்த நிர்வாகிகள்
ADDED : மார் 22, 2024 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரே தொகுதி, ஒரே வேட்பாளராக, தன் மகன் துரையை முன்னிலைப்படுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எடுத்த முடிவுக்கு, அக்கட்சியில் உருவாகியுள்ள மவுனப்புரட்சி எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.
தொகுதி பங்கீடு பேச்சு நடந்தபோது, தி.மு.க.,விடம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், மயிலாடுதுறை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க., விருப்பம் தெரிவித்தது. மாநில நிர்வாகிகள் துரை, கணேசமூர்த்தி, மல்லை சத்யா, செந்தில்நாதன், ஆடுதுறை முருகன், டாக்டர் ரொக்கையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சீட் வழங்க வேண்டும் என்பதால், ஆறு தொகுதிகளை தர வேண்டும் என, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் இரண்டு, மூன்று கட்டமாக பேச்சு நடத்தினர்.

