தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆசிய விளையாட்டில் வெள்ளி ஸ்ரீசங்கருக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டில் வெள்ளி ஸ்ரீசங்கருக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டில் வெள்ளி ஸ்ரீசங்கருக்கு உற்சாக வரவேற்பு


UPDATED : அக் 03, 2026 06:59 PM

ADDED : அக் 02, 2026 09:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 06:59 PM ADDED : அக் 02, 2026 09:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலக்காடு: ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் பெற்று தந்த தடகள வீரர் ஸ்ரீசங்கர், சொந்த ஊரான பாலக்காட்டுக்கு வந்தார்.

ஸ்ரீசங்கருக்கு, பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வாக்கர் உதவியுடன் வந்திறங்கிய ஸ்ரீசங்கர், நிருபர்களிடம் கூறியதாவது:

ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதல் போட்டியில், 4வது சுற்றின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, அடுத்த இரண்டு வாய்ப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், 2வது சுற்றில் வெளிப்படுத்திய மிகச்சிறந்த செயல்திறனின் அடிப்படையில் வெள்ளிப்பதக்கம் உறுதியானது.

நீளம் தாண்டுதலில் அமைக்கப்பட்டிருந்த ‘டேக்-ஆப் போர்டு’ தரமற்ற முறையில் வழுக்கும் தன்மையுடன் இருந்தது. இது தொடர்பாக பல வீரர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர்.

நான் போட்டியில் பங்கேற்ற தினம் மழையும் பெய்ததால், தளம் மேலும் வழுக்கியது. இதில், டேக்-ஆப் எடுக்கும் காலிலேயே காயம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் முழு ஓய்வை அறிவுறுத்தி உள்ளனர். அடுத்த சீசன் பாதிக்கப்படாமல் இருக்கவே தற்போது ‘ஏர் பூட்ஸ்’ பயன்படுத்தி வருகிறேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.

பாலக்காட்டில் நடந்த பாராட்டு நிகழ்ச்சியில், ஸ்ரீசங்கரின் பெற்றோர் மற்றும் எம்.பி., ஸ்ரீகண்டன், எம்.எல்.ஏ., ரமேஷ் பிஷாரடி, நகராட்சி தலைவர் ஸ்மிதேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us