ADDED : மார் 05, 2026 03:43 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிந்த நிலையில், ஆபரண தங்கம் சவரனுக்கு, 2,120 ரூபாய் குறைந்தது.
அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், கடந்த வாரம், தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்தது.
கடந்த சில தினங்களாக, அவற்றின் விலை சற்று குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 15,465 ரூபாய்க்கும், சவரன், 1,23,720 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 315 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 265 ரூபாய் குறைந்து, 15,200 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,120 ரூபாய் சரிவடைந்து, 1,21,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 20 ரூபாய் குறைந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 20,000 ரூபாய் சரிவடைந்து, 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

