ADDED : பிப் 25, 2026 04:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 14,860 ரூபாய்க்கும், சவரன், 1,18,880 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிரா முக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 14,890 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,19,120 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் குறைந்து, 290 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து, 2.90 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

