உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 21, 2026 02:33 AM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 15,000 ரூபாயும், ஆபரண தங்கம் சவரனுக்கு, 960 ரூபாயும் சரிவடைந்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,870 ரூபாய்க்கும், சவரன், 1,18,960 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 120 குறைந்து, 14,750 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 960 ரூபாய் சரிவடைந்து, 1,18,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 15 ரூபாய் குறைந்து, 285 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 15,000 ரூபாய் சரிவடைந்து, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
