உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 10, 2026 07:07 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 4,000 ரூபாய் குறைந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,750 ரூபாய்க்கும், சவரன், 1,02,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 272 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 12,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,02,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதேசமயம் வெள்ளி கிராம், நான்கு ரூபாய் குறைந்து, 268 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 4,000 ரூபாய் சரிவடைந்து, 2.68 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
