ADDED : ஜன 17, 2026 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி விலை கிலோவுக்கு 4,000 ரூபாய் குறைந்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த நிலை யில், நேற்று சற்று குறைந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13,290 ரூபாய்க்கும், சவரன் 1,06,320 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 310 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, 13,230 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 480 ரூபாய் சரிவடைந்து, 1,05,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து, 306 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 4,000 ரூபாய் சரிவடைந்து, 3.06 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

