ADDED : மே 15, 2026 06:43 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் குறைந்த நிலையில், தங்கம் சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்தது.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் வகையில், தங்கம், வெள்ளி இறக்குமதியை கட்டுப்படுத்த, அவற்றின் மீதான இறக்குமதி வரியை, 6 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்திஉள்ளது.
இதனால், நேற்று முன்தினம் தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்தது. தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 15,000 ரூபாய்க்கும், சவரன், 1,20,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 320 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் உயர்ந்து, 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 400 ரூபாய் அதிகரித்து, 1,20,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதேசமயம், வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 315 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 3.15 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
