ADDED : ஜூன் 19, 2026 02:08 AM

சென்னை: சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக நம் நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,030 ரூபாய்க்கும், சவரன் 1,12,240 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 275 ரூபாய்க்கு விற்கப்பட் டது. நேற்று காலை தங் கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 14,060 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 1,12,480 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிலோவுக்கு 5 ரூபாய் குறைந்து, 270 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்து, 2.70 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 880 ரூபாய் சரிவடைந்து, 1,11,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
