உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஏப் 11, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
சென்னை; தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,000 ரூபாய்க்கும், சவரன், 1,12,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் உயர்ந்து, 14,125 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் அதிகரித்து, 1,13,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 265 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் அதிகரித்து, 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்கப் பட்டது.
