உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : பிப் 08, 2026 07:15 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,250 ரூபாய்க்கும், சவரன் 1,14,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 280 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து, 14,420 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து, 1,15,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து, 285 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
