உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 14, 2026 06:23 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று வெள்ளி கிலோவுக்கு, 5,000 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 13,120 ரூபாய்க்கும், சவரன் 1,04,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 287 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 13,170 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 1,05,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ௫ ரூபாய் உயர்ந்து, 292 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 2.92 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
