உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 23, 2026 05:05 AM

அ நிறம் | அளவு
சென்னை, மே 23-
தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்தது. அதே சமயம், வெள்ளி கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,810 ரூபாய்க்கும், சவரன் 1,18,480 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து, 14,780 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் சரிவடைந்து, 1,18,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
அதேசமயம், வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 295 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு 5,000 அதிகரித்து, 2.95 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
