தமிழகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 உயர்வு
தமிழகத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 உயர்வு
ADDED : ஜன 08, 2026 02:02 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று காலை, வெள்ளி கிலோவுக்கு, 12,000 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலை கிலோவுக்கு, 6,000 ரூ பாய் குறைந்தது.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் வெள்ளி கிலோவுக்கு, 6,000 ரூபாய் அதிகரித்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,830 ரூபாய்க்கும், சவரன், 1,02,640 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 271 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 12,870 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 1,02,960 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 12 ரூபாய் உயர்ந்து, 283 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 12,000 ரூபாய் அதிகரித்து, 2.83 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று மாலை, தங்கம் கிராமுக்கு, 70 ரூபாய் குறைந்து, 12,800 ரூபாய்க்கு விற்பனையானது.
சவரனுக்கு, 560 ரூபாய் சரிவடைந்து, 1,02,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு, 6 ரூபாய் குறைந்து, 277 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று காலை, வெள்ளி கிலோவுக்கு, 12,000 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் கிலோவுக்கு, 6,000 ரூபாய் குறைந்தது.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில், வெள்ளி கிலோவுக்கு, 6,000 ரூபாய் அதிகரித்தது.

