sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

/

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

அடுத்த தாம்பரமாக உருவெடுக்கும் சிங்கப்பெருமாள் கோயில்

4


ADDED : ஜூலை 15, 2024 03:18 PM

Google News

ADDED : ஜூலை 15, 2024 03:18 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*அசுர வளர்ச்சி அடைந்த சிங்கப்பெருமாள் கோயில் சென்னையின் முக்கிய பகுதியாக உருவெடுப்பு*

சென்னையில் தாம்பரம் வரையுள்ள பகுதிகள்தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது, அதற்கு மேல் ஒன்றும் இல்லை என சொல்லி வந்த காலம் மாறி விட்டது. அதை தாண்டிய பகுதிகளும், சென்னைக்கு நிகரான வளர்ச்சியை கண்டு வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் செங்கல்பட்டுக்கும் மற்றும் மறைமலைநகர் இடையே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோயில் தான்.

ஐடி நிறுவனங்களை மையமாக கொண்ட ஓம்ஆர்- ஈசிஆர் பகுதியிலிருந்து வேறுபட்டு, பல்வேறு குடியிருப்பு தலமாக உருவாகி வருகிறது சிங்கப்பெருமாள் கோயில். கச்சிதமாக திட்டமிட்டு, போக்குவரத்து கட்டமைப்பு செய்துள்ளதால், குடியிருப்புவாசிகளுக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் இங்கு வசிக்கின்றனர். அவர்களுக்கு மின்சார ரயில் சேவை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்புகள் தடையில்லாமல் கிடைக்கிறது. சென்னையின் முக்கிய மையாக உள்ள இந்த பகுதி நகரின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.

ஜிஎஸ்டி ரோட்டில் சிங்கப்பெருமாள் கோவிலில் இடம் வாங்குவது தான் மிகவும் சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. ஏனென்றால் முடியும் தருவாயில் உள்ள ரயில்வே ஓவர் பாசின் விளைவாகசிங்கப்பெருமாள் கோவிலில் ஜிஎஸ்டி சாலையில் இடது புறத்திற்கு இணையாக தற்போது வலது புறம் உள்ள பகுதிகளிலும் வளர்ச்சி வேகம் அடைகிறது.

ரயில்வே ஓவர் பாஸ் பிரிட்ஜ் மட்டும் சிங்கப்பெருமாள்கோவிலின்சிறப்பு அம்சமாக இல்லை அதற்கு இணையாக எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை வர இருக்கும் சென்னை பெரிபெரல் ரிங் ரோடு சிங்கப்பெருமாள் கோவிலில் இணைகிறது, தாம்பரம் செங்கல்பட்டு உயர்நிலை சாலை வழித்தடம் ஒரு முக்கிய சிறப்பாக அமைந்துள்ளது. ஜிஎஸ்டி சாலையை ஒரகடத்துடன் இணைக்கும் ஒரே பகுதி சிங்கப்பெருமாள் கோவில் மட்டுமே. இவ்வாறு அனைத்து சிறப்பு அம்சங்களும் உள்ள சிங்கபெருமாள் கோவிலில் ரயில்வே ஓவர் பாஸ் பிரிட்ஜ் இறங்கும் இடத்தில், சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து ஒரு நிமிடத்தில் அமைந்துள்ள ஜிஸ்கொயர் பவிலியன்ல் வில்லா மனைகளை வாங்கினால் இரட்டிப்பு மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மக்கள் இங்கு மனை வாங்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

*ஜி.எஸ்.டி சாலையை இணைக்கும் வழிகள்*

*சென்னையில் ரயில், சாலை, மெட்ரோ மற்றும் விமான நிலைய இணைப்பை வழங்கும் ஒரே சாலை ஜி.எஸ்.டி தான்.

*சிங்கப்பெருமாள் கோயிலை, பெங்களூர் நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வெளிவட்ட சாலைக்கான இணைப்பு இருக்கிறது. இதனால் சென்னை சென்ட்ரல் முதல் பூந்தமல்லி வரை சுமார் 30 கிமீ தூரத்துக்கு பெரும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியுள்ளது.

*சென்னை பைபாஸ் உடன் இணைப்பு இருப்பதால், நேரடியாக கொல்கத்தா நெடுஞ்சாலையை அடையலாம். இதனால் சென்ட்ரல் முதல் மாதவரம் வரை சுமார் 20 கிமீ தூரமுள்ள பகுதிகள் வளர்ச்சி அடையும்.

*ஜிஎஸ்டி சாலையிலிருந்து வண்டலூர் - கேளம்பாக்கம்வழியாக ஓஎம்ஆர் - ஈசிஆர் பகுதிகளுக்கு ஐடி ஊழியர்கள் செல்ல கச்சிதமான இணைப்பு உள்ளது

*கிளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் சென்றடைய பயணிகளுக்கு வசதி அளிக்கிறது.

*சென்னை பெரிபெரல் ரிங் ரோடுக்கு இணைப்பு உள்ளதால், எண்ணூரில் இருந்து மகாபலிபுரம் வரையிலான வர்த்தக பாதையை இணைக்கிறது. இதனால் பயண நேரமும் குறைகிறது.

*850க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்*

சிங்கப்பெருமாள் கோயிலில் மஹிந்திரா, ரெனால்ட்- நிசான், போர்டு மற்றும் BMW உள்ளிட்ட முக்கிய ஆட்டோமொபைல் மற்றும் டயர் தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் மஹிந்திரா வேர்ல்ட்சிட்டி, ZOHO, கேப் ஜெமினி, விப்ரோ மற்றும் இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களும் உள்ளன.

SRM மற்றும் பல்வேறு மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. சிங்கப்பெருமாள் கோயிலுடன் அனைத்து முக்கிய இணைப்புச் சாலைகள் வழியாகவும் சுமார் 850 உற்பத்தித் தொழிற்சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன.

*சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம்*



ஜிஎஸ்டி சாலையில் வலதுபுறம் ரயில்வே பாதை இருப்பதால் இடதுபுற பகுதி வளர்ச்சி கண்டு வந்தது. புறவழி பாலங்கள், மேம்பாலங்கள் கட்டப்பட்டதால் ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன.

சிங்கப்பெருமாள் கோயில் மேம்பாலம், இப்போது ஜிஎஸ்டி சாலையின் இரு புறத்திலும் இணைப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மேலும் வளர்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

சென்னையின் முக்கிய வளர்ச்சிக்கு சிங்கப்பெருமாள் கோயில் முக்கிய பங்காற்றுகிறது. ஜிஎஸ்டி இணைப்பு இருப்பதால், பல்வேறு கட்டமைப்புகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறது.

இந்த மாபெரும் வளர்ச்சியால் பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் அடங்கியுள்ளது. இதனால் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. குடியிருப்புகளும் பெருகுவதால், புதிய தொழில் அமைக்க ஏற்ற இடமாகவும் மாறியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு க்ளிக் செய்யவும் https://gsquarepavillion.com






      Dinamalar
      Follow us