எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி; முதல்வர் ஸ்டாலின்
எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி; முதல்வர் ஸ்டாலின்
ADDED : நவ 10, 2025 03:24 PM

சென்னை; எஸ்ஐஆரில் இருந்து வாக்குரிமையை பாதுகாப்பதே தலையாய பணி என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு:
நியோ டைடல் பூங்கா, கந்தர்வகோட்டை பேரூராட்சியாகவும், பொன்னமரவாதி நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படும் உள்ளிட்ட ஆறு புதிய அறிவிப்புகளுடன், 766 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகள், நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றுக்குப் புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் மக்கள் அளித்த வரவேற்பால் பூரித்துப் போனேன்.
இந்திய மாநிலங்களைக் கடந்து, உலக அளவிலும் அங்கீகாரம் பெறும் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் 2026 தேர்தல் வெற்றியுடன் இன்னும் வீரியத்துடன் தொடரும்.
ஆனால், அதற்கு முன்பாக நம்முன் உள்ள பணி எஸ்ஐஆரில் இருந்து நம் வாக்குரிமையைப் பாதுகாப்பதே. இதுகுறித்து தொடர்ந்து பேச வேண்டும், விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், விழிப்போடு இருக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

