வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
வீடு புகுந்து எஸ்.ஐ., கணவரை தாக்கி 10 சவரன் கொள்ளை
ADDED : ஏப் 30, 2025 03:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை: எஸ்.ஐ., வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், அவரது கணவரை தாக்கி, 10 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே மணப்பட்டியில் வசிப்பவர், திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுமையாபானு, 42. இவரது கணவர் நாகசுந்தரம், 49. இவர்கள் வெளியூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர்.
நள்ளிரவில், இவர்களது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், சுமையாபானுவின் கணவர் நாகசுந்தரத்தை இரும்பு கம்பியால் தாக்கி, அவரிடமிருந்த 10 சவரன் நகையை பறித்து தப்பினர். திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

