திருமணம் ஆகி 26 நாள் மட்டுமே ஆன தங்கை, 2 குழந்தைகளுடன் அக்காள் மாயம்
திருமணம் ஆகி 26 நாள் மட்டுமே ஆன தங்கை, 2 குழந்தைகளுடன் அக்காள் மாயம்
ADDED : ஏப் 13, 2025 03:31 AM
நாகர்கோவில்: திருமணம் ஆகி 26 நாட்கள் மட்டுமே ஆன தங்கை, இரண்டு குழந்தைகளுடன் அக்காள் மாயமான சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே சிவந்த மண் காலனி கல்லடி விளையை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் 32. பைக் மெக்கானிக். மனைவி ராதிகா 27. ஐந்து மற்றும் நான்கு வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.
ராதிகாவின் தங்கை ராஜேஸ்வரி 25. இவருக்கு 26 நாட்களுக்கு முன் தான் திருமணம் ஆனது.
மார்ச் 25 ல் பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் ராதிகா வந்துள்ளார். ஏப்.9ல் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு கணவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டவர் ஆற்றின்கரை பகுதியில் உள்ள ராஜேஸ்வரியையும் உடன் அழைத்து சென்றுள்ளார். ஆனால் நான்கு பேரும் கிருஷ்ணகுமார் வீட்டுக்கு செல்லவில்லை.
ராதிகா, ராஜேஸ்வரி இருவருமே நர்சிங் படித்துள்ளனர். ராஜேஸ்வரி மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இருவரது அலைபேசியும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
மணவாளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.