'யாதும் அறியான்' படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்
'யாதும் அறியான்' படக்குழுவை பாராட்டிய சிவகார்த்திகேயன்
ADDED : ஜூலை 09, 2025 01:05 AM

சென்னை:கோபி இயக்கத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள, யாதும் அறியான் படக்குழுவிற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'பிரேக்கிங் பாயின்ட் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள, யாதும் அறியான் படத்தை கோபி இயக்க, லீட் ரோலில் அறிமுக நடிகர் தினேஷ் நடித்துள்ளார். அவருடன் அப்புகுட்டி, தம்பி ராமையா, கே.பி.ஓய் ஆனந்த பாண்டி, ப்ரணா, சியாமள் ஆகியோரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு எல்டி ஒளிப்பதிவு செய்ய, தர்மபிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில், இடம் பெற்றுள்ள முதல் பாடலான 'மலரே.... தினமே...' என்ற பாடல் சரிகம தமிழ் யு-டியூப் சேனலில் வெளியாகி, ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது. இந்த பாடலை எஸ்.கே. சித்திக் எழுத, சூப்பர் சிங்கர் பிரபலம் அருள்பிரகாசம் பாடியுள்ளார்.
படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியான நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை, ஹீரோ தினேஷ், இயக்குனர் கோபி, ஒளிப்பதிவாளர் எல்டி, பாடலாசிரியர் சித்திக் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டிரெய்லரை பார்த்த சிவகார்த்திகேயன், ''இதை பார்க்கும் போது, 'திரில்லர்' படம் என்பதும், ஏதோ ஒரு விஷயம் படத்தில் இருக்கு என்பதும் நன்றாக தெரிகிறது. வருஷத்தை மாற்றி மாற்றி காட்டுவதை பார்த்தால், புதுசா ஏதோ இருக்கிறது என்று தெரிகிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.
யாதும் அறியான் படம் இம்மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

