'அலைகள்' திட்டத்தில் மீனவ பெண்களுக்கு ரூ.50,000 சிறுகடன்
'அலைகள்' திட்டத்தில் மீனவ பெண்களுக்கு ரூ.50,000 சிறுகடன்
ADDED : ஜூலை 12, 2025 12:42 AM

சென்னை:''அலைகள் திட்டம் மூலமாக, மீனவ பெண்களுக்கு சிறு கடன் வழங்கப்படுகிறது,'' என, கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில், தேசிய மீன் வளர்ப்போர் தின விழாவையொட்டி, சிறந்த மீன் வளர்ப்போருக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், கால்நடை பராமரிப்புத் துறை செயலர் சுப்பையன் பேசியதாவது:
மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்களை தொழில் முனைவோராக உருவாக்க, 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 'அலைகள்' திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், கடலோர மீனவ கிராமங்களான ராமநாதபுரம் வடக்கு ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம், தொண்டி வரை, 200 மகளிர் குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் மூலமாக, மீன் வியாபாரம், கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றுக்கு, தலா 50,000 ரூபாய் சிறுகடன் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

