உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 31, 2026 01:34 AM

அ நிறம் | அளவு
சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே, ஏப்ரல் 1 முதல் துவங்கும் புதிய நிதியாண்டின் முதல் காலாண்டில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதங்களே தொடரும்.
இதன் வாயிலாக, அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் சிறுசேமிப்பு செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானம் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும். தொடர்ந்து 8வது காலாண்டாக வட்டி விகிதங்களில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
