ADDED : ஜன 21, 2025 05:09 AM

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு, அதிக தள்ளுபடியால் சேமிப்பை வழங்கும், 'ஸ்மார்ட் பஜாரின் புல் பைசா வசூல் சேல்' விற்பனை, நாளை முதல் 26ம் தேதி வரை கிடைக்கும். இந்த நாட்களில் நாடு முழுதும் உள்ள, 900க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் பஜார் கடைகளில், அனைத்து பொருட்களையும் அதிக சலுகையுடன் வாங்கி, சேமிப்பை பெறலாம்.
அதன்படி, 5 கிலோ அரிசி மற்றும் 3 லிட்டர் சமையல் எண்ணெய், 799 ரூபாய்க்கு கிடைக்கும். குளிர்பானங்கள் மூன்று வாங்கினால், ஒன்று இலவசமாக பெறலாம். பிஸ்கட் இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம். சலவை சோப்புகளுக்கு, 33 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.
முழு குடும்பத்திற்கும் தேவையான சாக்லேட்கள் முதல் வீட்டு அலங்கார பொருட்கள், லக்கேஜ், ஆடை வகைகள் வரை அதிக சேமிப்பை பெறலாம்.
மளிகை பொருட்கள், மளிகை அல்லாத பொருட்கள், வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் எதுவாக இருந்தாலும், அதிக சலுகையில் பெறலாம்.

