வெளிமாநில மது பாட்டில் கடத்தல்: போலீஸ் உட்பட இருவர் கைது
வெளிமாநில மது பாட்டில் கடத்தல்: போலீஸ் உட்பட இருவர் கைது
ADDED : ஜன 05, 2025 05:09 PM

திண்டுக்கல் : புதுச்சேரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு 129 வெளிமாநில மது பாட்டிலை கடத்தி வந்து விற்பனை செய்த போலீஸ்காரர்  உட்பட இருவரை மது விலக்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல் நத்தம் பண்ணுவார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார்36. இவர் சென்னை ஆவடியில் சிறப்பு காவல் படையில் போலீசாக  பணியாற்றுகிறார். இவர் புதுச்சேரியிலிருந்து 129 மது பாட்டில்களை தனது உறவினர் நத்தம் பண்ணுவார்பட்டியை சேர்ந்த  அழகுபாண்டி,என்பவருக்கு விற்பனை செய்வதற்காக காரில் பண்ணுவார்பட்டிக்கு கொண்டுவந்தார். இந்த தகவல் திண்டுக்கல் மது விலக்கு போலீசாருக்கு தெரிய இன்ஸ்பெக்டர் லாவண்யா,எஸ்.ஐ.,ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது போலீஸ்காரர்,முத்துக்குமார் 129 மது பாட்டில்களையும் டூவீலரில் எடுத்து கொண்டு பள்ளப்பட்டி பிரிவு அருகே அழகுபாண்டியிடம் கொடுக்க முயன்றார். அப்போது போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்து அவர்களிடமிருந்து 129 வெளிமாநில மது பாட்டில்கள்,1 டூவீலரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

