ரேஷன் அரிசி கடத்தல்: 2 விற்பனையாளர்கள் உட்பட 7 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல்: 2 விற்பனையாளர்கள் உட்பட 7 பேர் கைது
ADDED : மார் 20, 2024 12:11 AM
சிவகங்கை:சிவகங்கை அருகே 2160 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 ரேஷன் கடை பணியாளர்கள் உட்பட 7 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
எஸ்.ஐ., சிவபிரகாசம் உள்ளிட்ட போலீசார் இளையான்குடி சிவகங்கை ரோட்டில் சாத்தரசன்கோட்டை பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக சென்ற நான்கு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர்.
அதில் 45 சாக்குகளில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2160 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
வாகனத்தில் இருந்த சிவகங்கை நேருபஜார் செல்லப்பாண்டி 49, படமாத்துார் ராகுல்கண்ணன், சிவகங்கை காளீஸ் 20, மருதுபாண்டி 20, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மானாமதுரை கூட்டுறவு ரேஷன் கடை எண் 5 விற்பனையாளர் திலகவதி, வேளாளர் தெரு கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாளர் முருகேஸ்வரி, எடையாளர் மில்லர் ஜான்சஞ்சீவ்விற்கு தொடர்பு இருப்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

