சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் கொள்முதல் 33 சதவீதமாக உயர்வு
சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் கொள்முதல் 33 சதவீதமாக உயர்வு
ADDED : ஏப் 28, 2025 04:46 AM

சென்னை : தமிழக மின்வாரியம் கொள்முதல் செய்ய வேண்டிய, புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் அளவை, 33 சதவீதமாக மத்திய மின் துறை உயர்த்தி உள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவையை, அனல், எரிவாயு, அணு, சூரியசக்தி உள்ளிட்ட, பல வகை மின்சாரம் வாயிலாக, மின் வாரியம் பூர்த்தி செய்கிறது. இதில், சூரியசக்தி, காற்றாலையை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சாரம், சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை.
எனவே, மின் தேவையை பூர்த்தி செய்வதில், அந்த மின்சாரத்தின் பங்கு குறிப்பிட்ட அளவு கட்டாயம் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு வகை மின்சாரமும், எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கு, ஆர்.பி.ஓ., அதாவது, 'ரினுபவல் எனர்ஜி ஆப்ளிகேஷன்' என்று பெயர்.
தமிழகத்தில் ஆர்.பி.ஓ., அளவு, இந்த நிதியாண்டில், 33.01 சதவீதமாக இருக்க வேண்டும் என, மத்திய மின்துறை தெரிவித்துள்ளது.
இதில் காற்றாலை, 1.45 சதவீதம்; நீர் மின்சாரம், 1.22; சூரியசக்தி மின்சாரம் உள்ளிட்ட பிற வகை, 30.34 சதவீதம் இருக்க ேவண்டும். கடந்த, 2024 - 25ல் ஆர்.பி.ஓ., அளவு, 29.91 சதவீதமாக இருந்தது.