ADDED : டிச 21, 2025 12:46 AM

சென்னை: தமிழகத்தில், பிரதமர் சூரியசக்தி மின் திட்டத்தின் கீழ், கடந்த ஒன்றரை ஆண்டு களில், 48,700 வீடுகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இத்திட்டத்தின் வாயிலாக, 2026 - 27க்குள், ஒரு கோடி வீடுகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
ஒரு கிலோ வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும், 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும், மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
அதற்கு மேல் அமைத்தால், கூடுதல் மானியம் தரப்படுகிறது. இதனால், தமிழகத்தில் பலரும் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, ஆர்வம் காட்டுகின்றனர்.
இம்மாதம், 10ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில், 48,700 வீடுகளில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் சராசரியாக, 2 கிலோ வாட், 5 கிலோ வாட் என, மொத்தம், 260 மெகா வாட் திறனில், மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

