ADDED : டிச 09, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஒரே மாதத்தில் 45,911 சோலார் மின்சார விவசாய பம்புகளை நிறுவி கின்னஸ் உலக சாதனையை மஹாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனம் படைத்துள்ளது.
இந்த சாதனையின் வாயிலாக நாட்டிலேயே சோலார் விவசாய பம்புகளை விரைவில் நிறுவும் முன்னணி மாநிலமாகவும் உலகளவில் சீனாவுக்கு அடுத்த நிலையிலும் மஹாராஷ்டிரா உள்ளது.
சாதனை படைப்பதற்கு பிரதமரின் சோலார் மின்உற்பத்தி திட்டம் பெரிதும் உதவியதாக மஹாராஷ்டிர முதல்வர் தேவந்திர பட்னவிஸ் கூறியுள்ளார். இதுவரை 7.47 லட்சம் பம்புகளை அந்த மாநிலம் நிறுவியுள்ளது.

