தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் 11 லட்சம் யூனிட் வீணடிப்பு

சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் 11 லட்சம் யூனிட் வீணடிப்பு

சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் 11 லட்சம் யூனிட் வீணடிப்பு

1


ADDED : அக் 28, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 10:41 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்த, மின் வாரியம் இன்று (அக்.,28) அறிவுறுத்தியதால், 11 லட்சம் யூனிட் மின்சாரம் வீணடிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சங்க முதன்மை ஆலோசகர் வெங்கடாசலம் கூறியதாவது:

மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்திற்கு முன்னுரிமை தர, மத்திய மற்றும் மாநில சட்டங்கள் வழிவகை செய்துள்ளன. மின் தேவை குறைந்து, மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அனல், எரிவாயு மின் நிலையங்களில் உற்பத்தியை முதலில் நிறுத்தி விட்டு, கடைசியாக தான் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.

இதற்கு மாறாக, மின் வாரியம் முதலில் காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை இன்று நிறுத்தி விட்டு, கூடுதல் விலைக்கு வாங்கிய அனல் மற்றும் எரிவாயு மின்சாரத்தை பயன்படுத்தியது, எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.

இதனால், 8.60 லட்சம் யூனிட் சூரியசக்தி மின்சாரமும், 2.40 லட்சம் யூனிட் காற்றாலை மின்சாரமும் வீணாகி உள்ளது. இது, முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில், சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்திற்கு முன்னுரிமை தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மின் தேவை திடீரென குறைந்ததால், மின் வழித்தட பாதுகாப்பிற்காக, சில நிமிடங்களுக்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்திற்கு முன்னுரிமை தரப்படுகிறது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us