தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்

குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்

குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்


ADDED : ஆக 17, 2026 02:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 02:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: வெற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

சென்னை முதல் கோவை வரை நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்னையால் மக்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுதாவதாக ஊடகங்களில் வரும் செய்தி கவலையளிக்கிறது. வெயில் காலம் முடிந்தும் மின் தேவையைச் சரியாகக் கையாளத் தெரியாத தமிழக அரசு, மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றியுள்ளது. இந்த நிர்வாகத் தோல்வியும் அரசின் மெத்தனப் போக்கும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

வீடுகள் மட்டுமல்லாது, கோவை, விழுப்புரம் போன்ற தொழில் நகரங்களில் நிலவும் லோ-வோல்டேஜ் பிரச்னையால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாகி உற்பத்தி மொத்தமாக முடங்கியுள்ளதாகத் தொழில்துறையினரே வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொழில்துறையைச் சீரழித்த பெருமை இந்த அரசையே சாரும். மின் வாரியப் பராமரிப்புப் பணிகளில் தோல்வி ஏற்பட்டுள்ளதை அதிகாரிகளே ஒப்புக்கொள்ளும் நிலையில், மின்துறை அமைச்சர் ற்று வாக்குறுதிகள் அளிப்பதை நிறுத்திவிட்டு, இப்பிரச்னைக்குத் தொழில்நுட்ப ரீதியாக போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us