நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
n தமிழ்நாடு தொடக்க பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 2342 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் ஜூலை 18 வரை சென்னையில் 10 இடங்களில் கலந்தாய்வு நடக்க உள்ளது. இதில் அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். ஜூலை 23ல் முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
n தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் இயங்கும் சட்ட கல்லுாரிகளில், மூன்றாண்டு சட்ட படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 25 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விரும்புவோர் 'www.tndalu.ac.in' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.