சவுமியாவின் உரிமை மீட்பு பயணம் இன்று துவங்குகிறது
சவுமியாவின் உரிமை மீட்பு பயணம் இன்று துவங்குகிறது
ADDED : டிச 06, 2025 09:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணியை தொடர்ந்து, அவரது மனைவியும் பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா, காஞ்சிபுரத்தில் இன்று, உரிமை மீட்பு பயணத்தை துவக்குகிறார்.
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில், பா.ம.க., தலைவர் அன்புமணி, தமிழகம் முழுதும் 108 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவரது மனைவி சவுமியா, உரிமை மீட்பு பயணம் மேற்கொள்கிறார்.
அதிகாரத்தில் பெண்களுக்கு சம வாய்ப்பு, மதுவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான பெண்களின் உரிமை, வன்முறை இல்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை உள்ளிட்ட, 10 உரிமைகளை முன்வைத்து, சவுமியா பிரசாரம் செய்ய இருப்பதாக, பா.ம.க., அறிவித்துள்ளது.

