கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனை
கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஆலோசனை
ADDED : அக் 06, 2025 02:13 AM
சென்னை: தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து, பயணியர் அமைப்புகளிடம் தெற்கு ரயில்வே விபரம் சேகரித்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, செங்கோட்டை, துாத்துக்குடிக்கு ஆறு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த ரயில்களில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
மேலும், திருச்சி, மதுரைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இருப்பினும், கூடுதல் ரயில்கள் இயக்க வேண் டும் என்றும், வழக்கமான வழித்தடத்தை தாண்டி, கடலுார், கும்ப கோணம், ராமேஸ்வரம் உள்ளிட்ட வழித் தடங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்றும், பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தீபாவளிக்கு மேலும் சில சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து, பயணியர் சங்கங்கள் மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.