தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ முன்னதாகவே துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

 முன்னதாகவே துவங்குகிறது தென்மேற்கு பருவமழை

 முன்னதாகவே துவங்குகிறது தென்மேற்கு பருவமழை


ADDED : ஏப் 27, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 02:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே துவங்கும்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளம், கர்நாடகா உட்பட பல மாநிலங்களின் மழை தேவையை பூர்த்தி செய்வது தென்மேற்கு பருவமழை. ஆண்டுதோறும் ஜூன் 1 அல்லது அம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்த பருவமழை துவங்கும்; செப்டம்பர் இறுதி வரை மழை நீடிக்கும்.

கேரளம், கர்நாடகத்துக்கு பிரதான மழைக்காலம் என்றாலும், தமிழகத்தில் 32 செ.மீ., அளவுக்கு தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை பொழிவு இருக்கும்.

கடந்த ஆண்டு, 35 செ.மீ., அளவுக்கு மழை பெய்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே துவங்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து, தன்னார்வ வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறியதாவது:

இயல்பாக ஜூன் முதல் வாரத்தில் கேரளம் மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும். இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக, மே மாதம் நான்காவது வாரத்திலேயே துவங்க வாய்ப்புள்ளது. ஆனாலும், தமிழகத்தில் இயல்பை விட குறைவான அளவே மழை பெய்யலாம்.

அக்டோபர் மாதம் முதல் பசிபிக் பெருங்கடலில் உருவாகும், 'சூப்பர் எல்நினோ' காரணமாக, தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம், ஜூலை, ஆக., செப்., மாதங்களிலும் நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த காலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெயில் 3 டிகிரி அதிகரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை: வடக்கு கர்நாடகா முதல் தமிழகத்தின் குமரிக்கடல் வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம். தமிழகத்தின் சில மாவட்டங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம், 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு, அதிக வெப்பத்தால் அசவுகரியம் ஏற்படக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை, 38 டிகிரி செல்ஷியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us