தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது

 தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது

 தென்மேற்கு பருவமழை நாளை தொடங்குகிறது


ADDED : மே 15, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 15, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உ ள்ளது.

அதன் அறிக்கை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கட லில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது.

அதன் மையப்பகுதியில் இருந்து, தெற்கு மஹாராஷ்டிரா வரை, ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

இந்த பின்னணியில், தெற்கு வங்கக்கடலின் சி ல பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில், தென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோவை, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக தென் மாவட்ட கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில், சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us