ADDED : செப் 27, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தென்மேற்கு பருவ மழை காலத்தில், ஜூன் 1 முதல் நேற்று வரை, மழைக்கு எட்டு பெண்கள் உள்பட, 40 பேர் இறந்துள்ளனர். மேலும், கால்நடைகள் 232; கோழிகள் 13,500 இறந்துள்ளன. குடிசைகள், வீடுகள் 1148 சேதம் அடைந்துள்ளன.
ஜூன் 1 முதல் நேற்று வரை, 36.9 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பான மழை அளவை விட, 21 சதவீதம் அதிகம். சென்னையில் நேற்று வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில், கன மழையை எதிர்கொள்ள, மாவட்டங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.
மழையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், நிவாரண பணிகளை முழு வீச்சில் செய்யவும், அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.