ADDED : பிப் 11, 2025 08:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலைக்கான வழிகாட்டி பலகையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உலகம் முழுவதும் புகழ்பெற்றவர்.
அவரது நினைவை போற்றும் வகையில், அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எஸ்பிபி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் கோாிக்கை ஏற்று தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில்,
'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை'க்கான வழிகாட்டி பலகையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
எஸ் பி பாலசுப்பிரமணியம் உருவப்படத்துக்கும் மரியாதை செலுத்தினார்.