தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ சட்டசபையில் உரிமை குழு உட்பட 11 குழுக்கள் நியமித்தார் சபாநாயகர்

 சட்டசபையில் உரிமை குழு உட்பட 11 குழுக்கள் நியமித்தார் சபாநாயகர்

 சட்டசபையில் உரிமை குழு உட்பட 11 குழுக்கள் நியமித்தார் சபாநாயகர்


ADDED : செப் 09, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டசபையில் உரிமை குழு, சபை விதிகள் குழு, மதிப்பீட்டு குழு உட்பட, 11 குழுக்களின் தலைவர்களை, சபாநாயகர் பிரபாகர் அறிவித்தார்.

அதன்படி, சபை விதிகள் குழு தலைவராக சபாநாயகர் இருப்பார். இக்குழுவில் முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அத்துடன், மதிப்பீட்டுக் குழு தலைவராக த.வெ.க., அருள் பிரகாசம், பொதுக்கணக்கு குழு தலைவராக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சையத் பாரூர் பாஷா, பொது நிறுவனங்கள் குழு தலைவராக த.வெ.க., கல்லாணை, சபை உரிமை குழு தலைவராக துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் ராமச்சந்திரன், அரசு உறுதிமொழி குழு தலைவராக த.வெ.க., விஜய் சரவணன், மனுக்கள் குழு தலைவராக த.வெ.க., சபரிநாதன், பேரவை நுாலக குழு தலைவராக வி.சி.க., ஜோதிமணி, பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள் குழு தலைவராக த.வெ.க., விஜய் தாமு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அக்குழுவிற்கான உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us