ADDED : ஆக 26, 2026 03:18 AM
சென்னை: ''சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் செயல் குறித்து, விசாரித்து முடிவு செய்யப்படும்,'' என, சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - ஆஸ்டின்: சிறுபான்மை ஆணையத் தலைவராக, பெலிக்ஸ் ஜெரால்டு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருப்போர், மற்றவர்களை விமர்சித்து பேசக்கூடாது என, விதிகள் இருக்கின்றன. அவர் அரசியல் விவாதங்களில் பங்கேற்கிறார். இதை சட்டப்படி தடுக்க வேண்டும் அல்லது அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அமைச்சர் நிர்மல்குமார்: 'டிவி' விவாதங்களில் பங்கேற்பது, தனிப்பட்ட உரிமை. பொது மேடையில் பேசக்கூடாது என்றெல்லாம் கிடையாது.
திண்டுக்கல் லியோனி, பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் எல்லாம் அரசியல் விவாதங்களில் பேசியுள்ளனர். மற்றபடி பெலிக்ஸ் ஜெரால்டு மீது தவறு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்.
சபாநாயகர் பிரபாகர்: வாரிய தலைவருக்கும், ஆணைய தலைவர் பொறுப்பிற்கும், வித்தியாசம் இருக்கிறது. ஆஸ்டின் கருத்து குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
